×

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது: இஸ்ரேல் அறிவிப்பு

காசா: ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது. காசாவின் மக்கள் அமைதியின்றி தினம் தினம் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். போரை நிறுத்துமாறும், காசா மக்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளை அனுப்புமாறும் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் காதுகொடுத்து கேட்டபாடில்லை. ‘ஹமாஸை அழிக்கும்வரை போரில் இருந்து பின் வாங்க போவதில்லை’ எனத் திட்டவட்டமாக அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல்களை தொடர்ந்து வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய தலைவர் உமர் அல்-பயேத் என்பவரைக் கைது செய்திருப்பதாக இஸ்ரேல் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு படை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

The post ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது: இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...